விளையாட்டு
Now Reading
இளைஞர்களின் அமைதியான போராட்டம்: வீரேந்திர சேவாக்
0

இளைஞர்களின் அமைதியான போராட்டம்: வீரேந்திர சேவாக்

by editor sigappunadaJanuary 18, 2017 12:08 pm

Virender-Sehwag3

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்களின் அமைதியான போராட்டத்தால் வீரேந்திர சேவாக் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் பலரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

இளைஞர்கள் ஒன்றுகூடி நடத்தும் இப்போராட்டத்துக்கு தமிழ் திரையுலகினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இப்போராட்டம் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பலராலும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

இப்போராட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், “அமைதியான முறையில் தமிழகத்தில் போராட்டம் நடைபெறுவதைப் பார்க்க அற்புதமாக இருக்கிறது. உங்கள் உணர்வுகளிலும் அமைதி காக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். அமைதியான போராட்டமே அனைவருக்கும் பாடமாக அமையும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response