சினிமா
Now Reading
இளைஞனை பாராட்டிய கலைஞன்!
0

இளைஞனை பாராட்டிய கலைஞன்!

by Sub EditorApril 21, 2017 3:49 pm

சமீபத்தில் வந்த ‘8 தோட்டாக்கள்’ என்ற படம் சத்தம் போடாமல் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. புதுமுக இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் க்ரைம் த்ரில்லர் கதையாக உருவாகியிருக்கும் இப்படத்தின் நடிகர், நடிகைகள் புதுமுகங்கள். இப்படத்தில் நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். 22 வயதேயான ஸ்ரீகணேஷ் இயக்கிய ‘8 தோட்டாக்கள்’ படம் கடந்த வாரம் வெளியானது. தனியார் தொலைக்காட்சி நடத்திய ‘நாளைய இயக்குநர்’ என்ற நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் டைட்டில் வின்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் இந்த ஸ்ரீகணேஷ். அதன்பிறகு இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றிய நிலையில்தான் இந்தப் படத்திற்கான வாய்ப்பு கிடைத்தது.

மலையாள நடிகை அபர்ணா முரளி இந்தப் படம் மூலம் தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். ‘8 தோட்டாக்கள்’ படம், விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் வித்தியாசமான நல்ல படம் என்ற வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் நடித்த அனைவருடைய கதாபாத்திரங்களும் பேசப்பட்டது. குறிப்பாக எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பும், அவரது கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

திரைப்பட நடிகர்கள், இயக்குநர், பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் எனப் பலரும் எம்.எஸ்.பாஸ்கரை நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் தொடர்புகொண்டு, அவருடைய நடிப்புக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதனால் உற்சாகம் அடைந்த எம்.எஸ்.பாஸ்கர் தன்னுடைய கதாபாத்திரத்துக்குண்டான நடிப்பை வெளிக்கொண்டு வரக் காரணமாக இருந்த இயக்குநர் ஸ்ரீகணேஷை பாராட்ட முடிவு செய்து தனது வீட்டுக்கு வரவழைத்தார். இயக்குநர் ஸ்ரீகணேஷ், பட விமர்சனங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ளத்தான் எம்.எஸ்.பாஸ்கர் தன்னை அழைத்திருக்கிறார் என்று நினைத்து வந்துள்ளார். வந்தவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் எம்.எஸ்.பாஸ்கர் பொன்னாடையைப் போர்த்தி, தங்க சங்கிலி ஒன்றை அவருக்குப் பரிசாக அளித்துப் பாராட்டியுள்ளார். இந்த விஷயத்தைச்ச மூக வலைதளங்களில் ரசிகர்கள் பாராட்டி பகிர்ந்து வருகிறார்கள்.

– நேசன்

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response