விளையாட்டு
Now Reading
இறுதிப் போட்டிக்கு தமிழ்நாடு முன்னேறுமா?
0

இறுதிப் போட்டிக்கு தமிழ்நாடு முன்னேறுமா?

by Sub EditorDecember 31, 2016 12:29 pm

இந்த சீசனுக்கான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி அரை இறுதிக்கு தமிழ்நாடு, மும்பை, குஜராத், ஜார்க்கண்ட் ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

அரை இறுதி ஆட்டங்கள் நாளை தொடங்குகின்றன. ராஜ்கோட்டில் நடக்கும் அரை இறுதியில் தமிழ்நாடு- மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

‘லீக்’ ஆட்டங்களில் தமிழ்நாடு அணி ரெயில்வே, பரோடா அணிகளை வென்றது. மும்பையிடம் தோற்றது. குஜராத், பஞ்சாப், பெங்கால், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் அணிகளுடன் ‘டிரா’ செய்தது.

கால் இறுதியில் பலம் வாய்ந்த கர்நாடகாவை அபாரமாக வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது. 2 நாளில் அந்த அணியை தோற்கடித்து அசத்தியது.

தமிழக அணியில் கேப்டன் அபினவ் முகுந்த், கவுசிக் காந்தி, தினேஷ் கார்த்திக், பாபா அபராஜித் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

பந்து வீச்சில் விக்னேஷ், அஸ்வின் கிறிஸ்ட், நடராஜன் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

இதனால் தமிழ்நாடு அணி நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது. பலம் வாய்ந்த மும்பையை வீழ்த்தி தமிழ்நாடு இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response