மாவட்டம்
Now Reading
இரட்டை இலை சின்னம் யாருக்கு: தேர்தல் அதிகாரிகள் கருத்து!
0

இரட்டை இலை சின்னம் யாருக்கு: தேர்தல் அதிகாரிகள் கருத்து!

by editor sigappunadaMarch 12, 2017 9:08 am

தற்போது அதிமுக இரண்டு அணிகளாக செயல்பட்டுவரும் நிலையில் எந்த அணிக்கு சின்னம் என்ற பிரச்சனை எழும் அபாயம் உள்ளது. இரண்டு அணியினரும் தேர்தலில் போட்டியிடுவதாலும், மூன்றாவதாக தீபாவும் சின்னத்துக்கு சொந்தம் கொண்டாடுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.இந்த சிக்கலான சூழ்நிலையில் யாருக்கு சின்னம் கிடைக்கும் என்பதை தமிழகத்தில் பணியாற்றிய முன்னாள் தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கியுள்ளனர் .

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ். கிரிஷ்ணமூர்த்தி கூறுகையில், “இப்போது நிலவரப்படி அதிமுக சசிகலா பக்கமே உள்ளது. ஆகவே இரட்டை இலை சின்னமும் அவரிடமே இருகின்றது. அவர் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு அந்த சின்னம் கிடைக்கும். மற்றவர்கள் போட்டியிட்டால் சுயேட்சையாக தான் நிற்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல, முன்னால் தலைமை தேர்தல் ஆணையர் வி.கோபாலசாமி கூறுகையில், ஆர்.கே.நகர் நேர்தல் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஆகவே, தேர்தல் ஆணையத்தின் தீர்ப்புதான் வர வேண்டும். இந்த தேர்தலுக்குள் தீர்ப்பு வழங்கப்படாவிட்டால் சசிகலா தான் பொது செயலராக நீடிப்பார். சசிகலாவிற்கு எதிராக தீர்ப்பு வந்தால் கட்சி துணை பொது செயலாளர் தினகரன் அதிமுக வேட்பாளரின் மனுவில் கையெழுத்திடுவார்” என்று தெரிவித்தார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response