மாவட்டம்
Now Reading
இப்போது முழு கமிஷனும் எம்.எல்.ஏக்களுக்குதானாம்!
0

இப்போது முழு கமிஷனும் எம்.எல்.ஏக்களுக்குதானாம்!

by Sub EditorMarch 4, 2017 3:43 pm

திருப்பூர் மாநகராட்சியில் தற்போது பணிகள் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. மாநகராட்சியின் முப்பது வார்டுகளிலும் தனியார் நிறுவனம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிறுவனம், மாதா மாதம் பத்து லட்சம் ரூபாயை கமிஷனாக கொடுக்கிறதாம். யாருக்கு என்று தானே கேட்கிறீர்கள்? யாருக்கு என்பதைவிட எப்போது என்பதுதான் சரி.
அதாவது இதுவரை மேயருக்கு தனியாவும் கவுன் சிலர்களுக்கு பத்தாயிரம் வீதமாகவும் கவனிப்பு இருந்து வந்துள்ளது. இப்போது மேயர் பதவியும், கவுன்சிலர்கள் பதவியும் காலாவதியாகிப் போனதால் அந்தக் கமிஷனை அப்படியே அமுக்கி விடலாம் என்று நினைத்து முழு கமிசனையும் கறாராக கேட்டு வாங்கி விடுகிறார்களாம் திருப்பூர் மாநகராட்சிகுட்பட்ட மூன்று எம்.எல்.ஏக்கள். இதனால் கட்சிக்குள்ளே சண்டை உருவாகிவிட்டது. மாநகர செயலருக்கும், மாவட்ட செயலருக்கும் இந்த விசயம் தெரிந்து பங்கு கேட்டிருகிறார்கள். அவர்கள் கொடுக்காததால், அமைச்சருக்கும், தலைமைக்கும் புகார் சென்றிருக்கிறதாம்.

– அமான்

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response