சினிமா
Now Reading
இன்னும் 20 ஆண்டுகள் இங்கேதான் இருப்பேன் – சன்னிலியோன்
0

இன்னும் 20 ஆண்டுகள் இங்கேதான் இருப்பேன் – சன்னிலியோன்

by Sub EditorJanuary 28, 2017 12:30 pm

வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமான சன்னிலியோன் இந்தியில் அறிமுகமாகி கவர்ச்சியாக நடித்து வருகிறார்.

தற்போது ஷாருக்கான் படத்தில் நடித்த சந்தோஷத்தில் இருக்கிறார். இதுகுறித்து சன்னிலியோன் அளித்த பேட்டி…

“இந்தி படவுலகில் எனக்கு எதிராக நிறைய வதந்திகள் பரப்பப்பட்டன. ‘இன்னும் 2 மாதங்கள்தான் இங்கு இருப்பார் அதன்பிறகு பெட்டி படுக்கையை தூக்கிக்கொண்டு அவர் நாட்டுக்கே திரும்பி விடுவார்’ என்று பேசினார்கள். நீலப்படத்தில் நடித்து இருக்கிறேன் என்று என்னை பலரும் வெறுப்பாகவே பார்த்தனர். இந்தி பட உலகில் அதிக நாட்கள் நீடிக்க முடியாது என்றும் கூறினார்கள். பெரிய நடிகர்கள் படங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அவர்கள் என்னிடம் பேசவே தயங்கினார்கள்.

இதனால் மனம் நொந்த நிலையில் இருந்தேன். இந்த நிலையில்தான் ஷாருக்கான் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் நான் நடிப்பதற்கு ஷாருக்கான் எதிர்ப்பு சொல்லவில்லை. அந்த படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினேன். இதன்மூலம் பெரிய நடிகர் படத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறிய சந்தோஷத்தில் இருக்கிறேன்.

2 மாதத்தில் நாட்டை விட்டு ஓடிவிடுவேன் என்றார்கள். ஆனால் இரண்டு ஆண்டுகளாக நடித்துக்கொண்டு இருக்கிறேன். இன்னும் 20 ஆண்டுகள் இங்கேதான் இருப்பேன். கடவுள் ஆசீர்வாதம் எனக்கு இருக்கிறது. எனது வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது” என்று கூறினார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response