அரசியல்
Now Reading
இனி கார்டு கிடையாது.. எல்லாம் கைரேகைதான்
0

இனி கார்டு கிடையாது.. எல்லாம் கைரேகைதான்

by editor sigappunadaJanuary 8, 2017 1:12 pm

thumb

வரும் 2020 முதல் ஏடிஎம், கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தாமல் கைரேகை மூலம் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு திட்டமிட்டு வருவதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள மக்களை டிஜிட்டல் பரிவர்த்தனையில் ஈடுபடுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கிவரும். நிதி ஆயோக் அமைப்பு நாட்டின் வளர்சிக்காக புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நிதி அயோக் செயல் அதிகாரி அமிதாப் காந்த் கூறியதாவது: நிதி ஆயோக் அமைப்பு, சமூக நலனுக்காக தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் முனைப்பில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் ஏடிஎம், டெபிட் கார்டு போன்றவற்றின் மூலம் மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனைகளை மாற்றி, கைரேகையை வைத்து ஸ்மார்ட்ஃபோன் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

ஆதார் எண் கட்டாயமாக்கப்படுவதன் மூலமாக, நாட்டு மக்கள் அனைவரின் பயோமெட்ரிக் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் மொபைல் செயலியை பயன்படுத்தி எளிதாக பணப்பரிவர்த்தனை செய்யலாம்.அதற்காக புதிய செயலியை வடிவமைத்து வருவதாக அமிதாப் காந்த் கூறியுள்ளார்.

இதையும் படிச்சிருங்க !
அடித்து கொலை செய்யப்பட்டார் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலர் - முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுப்பதற்காக பயன்படுத்திவந்த கொடநாடு எஸ்டேட் பஙகளாவில் பணியாற்றும் காவலாளி கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளிக்கு கையில் அரிவாள் வெட்டுக்காயம் ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response