மாவட்டம்
Now Reading
இந்த கோடையில் வெப்பம் அதிகரிக்கும்
0

இந்த கோடையில் வெப்பம் அதிகரிக்கும்

by editor sigappunadaApril 5, 2017 11:58 am

நாடு முழுவதும் இந்த கோடையில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில், தமிழகத்தின் பல நகரங்களில் ஏப்ரல் மாதத் தொடக்கத் திலேயே 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் கொளுத்துகிறது.

கோடைகாலத்துக்கான (ஏப்ரல் – ஜூன்) வெப்பநிலை குறித்த முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கோடைகால முன்னறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த கோடையில் நாடு முழுவதும் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக இருக்கும் என்று இதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு ஏற்றார்போல, மார்ச் மாத பிற்பகுதியில் இருந்தே தமிழகம் முழுவதும் பரவலாக வெப்பநிலை அதிகரித்து வந்தது. கடந்த 2-ம் தேதி நிலவரப்படி அதிகபட்சமாக 9 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. சேலத்தில் அதிகபட்சமாக 105.26 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில், தமிழகத்தின் பல நகரங்களில் ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் கொளுத்துகிறது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response