விளையாட்டு
Now Reading
இந்தியா-இங்கிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்குமா?
0

இந்தியா-இங்கிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்குமா?

by Sub EditorDecember 7, 2016 2:52 pm

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை சென்னையில் வருகிற 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் திடீர் மறைவால் இந்த டெஸ்ட் போட்டி சென்னையில் திட்டமிட்டபடி நடக்குமா? அல்லது வேறு இடத்துக்கு மாற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அஜய் ஷிர்கே நேற்று கூறும் போது, ‘சென்னை டெஸ்ட் குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சில நேரம் சூழ்நிலையையும், மக்களின் உணர்வுகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அங்கு நிலவும் சூழல் குறித்து அறிய தமிழக கிரிக்கெட் சங்கத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்’ என்றார்.

இதையும் படிச்சிருங்க !
அடித்து கொலை செய்யப்பட்டார் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலர் - முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுப்பதற்காக பயன்படுத்திவந்த கொடநாடு எஸ்டேட் பஙகளாவில் பணியாற்றும் காவலாளி கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளிக்கு கையில் அரிவாள் வெட்டுக்காயம் ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response