மாவட்டம்
Now Reading
இந்தியாவின் சிறந்த கல்லூரிகள் பட்டியல். சென்னை லயோலாவுக்கு 2வது இடம்
0

இந்தியாவின் சிறந்த கல்லூரிகள் பட்டியல். சென்னை லயோலாவுக்கு 2வது இடம்

by editor sigappunadaApril 4, 2017 11:47 am

 

இந்தியாவில் உள்ள தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.  மத்திய மனித வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் தமிழகத்தில் உள்ள 22 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் உள்ள சிறந்த கல்லூரிகள் பட்டியலில் தமிழக  தலைநகர் சென்னையில் உள்ள லயோலா கல்லூரி 2வது இடத்தில் உள்ளது. மேலும் திருச்சி பிஷப் ஹெபர் கல்லூரி 4வது இடத்திலும், சென்னை கிறிஸ்டியன் பெண்கள் கல்லூரி 10வது இடத்திலும், கோவை பி.எஸ்.ஜி கல்லூரி 11வது இடத்திலும், காஞ்சிபுரம் மெட்ராஸ் கிறிஸ்டிய கல்லூரி 12வது இடத்திலும், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி 13வது இடத்திலும், கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி 14வது இடத்திலும், சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரி 16வது இடத்திலும் உள்ளது.

இந்தியாவின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகள் பட்டியலில் ஐஐடி மெட்ராஸ் முதலிடம் பிடித்துள்ளது. மேலும் சிறந்த கல்வி நிறுவனத்துக்கான ஒட்டுமொத்த தரவரிசைப் பட்டியலில்  ஐ.ஐ.டி மெட்ராஸ் இரண்டாம் இடமும், அண்ணா பொறியியல் கல்லூரி 13-ம் இடமும் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிச்சிருங்க !
பிரியாணிக்கான சண்டையால் நின்று போன திருமணம் - பெண் வீட்டார் அசைவ உணவை வழங்காததால் ஏற்பட்ட பிரச்சினையில், மீரட்டின் முஸாஃபர் நகர் கிராமத்தில் நடைபெற இருந்த திருமணம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்துத் திருமணப் பெண் நக்மா Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response