உலகம்
Now Reading
இந்தியாவின் கோரிக்கை நிராகரிப்பு!
0

இந்தியாவின் கோரிக்கை நிராகரிப்பு!

by editor sigappunadaApril 28, 2017 11:35 am

கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை தாக்குதல் வழக்கை மறு விசாரணை செய்யுமாறு இந்தியா விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது.

2008ஆம் ஆண்டு செப்டம்பரில், மும்பையில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் மோட்டார் பைக்கில் வைக்கப்பட்ட குண்டு வெடிப்பில் எட்டு பேர் பலியாகினர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இக்குண்டு வெடிப்பு சம்பந்தமாக இந்திய நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறுவதைப் போலவே, பாகிஸ்தான் நீதிமன்றத்திலும் தனி விசாரணை நடைபெறுகிறது. இந்த விசாரணைக்காக இந்திய தரப்பில் குறிப்பிட்டுள்ள 24 சாட்சியங்களைப் பாகிஸ்தானுக்கு அனுப்புமாறு அந்நாட்டு அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

இதற்கு, இந்த வழக்கை மறு விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஜமாத் உத் தவா தலைவர் ஹபீஸ் சயீதையும், லஷ்கர்-ஏ-தொய்பா தலைவர் ஜகியூர் ரஹ்மான் லக்வியையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தி வந்தது. ஹபீஸ் சயீதுக்கு எதிராக உறுதியான ஆதாரத்தை இந்தியா அளித்தால், அவரை விசாரிப்பதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்தது. லக்விக்கிக்கு போதிய ஆதாரம் இல்லாததினாலேயே அவர் விடுவிக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வியாழக்கிழமை (நேற்று) இவ்வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் மூத்த உள்துறை அமைச்சரக அதிகாரி, ‘இவ்வழக்கு சரியான முறையில் நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் கேட்டிருந்த 24 இந்திய சாட்சியங்களின் வாக்குமூலங்களைத் தவிர, இறுதிக்கட்டத்தில் இருக்கும் இவ்வழக்கை மறுவிசாரணைக்கு உட்படுத்த முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப், ஹபீஸ் சயீதைச் சந்தித்துள்ளார் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை. இவ்வழக்கில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க இந்தியா அந்த 24 சாட்சியங்களை இங்கு அனுப்ப வேண்டும்’ எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response