உலகம்
Now Reading
இத்தாலியில் தொடர் நிலநடுக்கங்கள் – அச்சத்தில் மக்கள்!
0

இத்தாலியில் தொடர் நிலநடுக்கங்கள் – அச்சத்தில் மக்கள்!

by Sub EditorJanuary 19, 2017 11:04 am

இத்தாலியில் ஒருமணி நேரத்திற்குள் அடுத்தடுத்து ஏற்பட்ட மூன்று நிலநடுக்கங்களால் ரோம் உள்ளிட்ட நகரங்கள் குலுங்கின.  மேலும் அங்கு வாழும் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

பனிக்காலத்தில் மூன்றடி பனியில் நகரம் மூழ்கிக்கிடக்கும் நிலையில் இந்த நிலநடுக்கங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த நிலநடுக்கத்தால் பள்ளிகளுக்கு சென்ற பிள்ளைகளை திரும்ப அழைத்துச் செல்லுமாறு பெற்றோருக்கு பள்ளிகள் தகவல் அளித்தன. பல அலுவலகங்களும் சுரங்கப்பாதைகளும் மூடப்பட்டன.

நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் முதலில்  5.7 அடுத்து  5.3 பின் மீண்டும் 5.3 என இந்த மூன்று ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு குறித்தும் சேதங்கள் குறித்தும் எந்த தகவல்களும் இல்லை.

கடந்த ஆண்டு அமடிரைஸ் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 300 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response