விளையாட்டு
Now Reading
ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதிக்கு முன்னேறினார் வீனஸ் வில்லியம்ஸ்
0

ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதிக்கு முன்னேறினார் வீனஸ் வில்லியம்ஸ்

by editor sigappunadaJanuary 24, 2017 3:57 pm

மெல்போர்ன் நகரில் நடந்து வரும், 2017ம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மகளிர் ஒற்றையர் பிரிவின் கால் இறுதி போட்டி ஒன்று இன்று அதிகாலை மெல்போர்ன் பார்க்கில் நடந்தது. இதில், 17ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ்-27ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் அனஸ்டாசியா ஆகியோர் மோதினர். இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய வீனஸ் வில்லியம்ஸ் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார். 36 வயதாகும் வீனஸ் வில்லியம்ஸ் இதுவரை ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றதில்லை. கடந்த 2003ம் ஆண்டு ரன்னராக வந்ததே ஆஸ்திரேலிய ஓபனில் அவரது சிறந்த செயல்பாடாக உள்ளது. 2003ம் ஆண்டு இறுதி போட்டியில் தனது சகோதரியான செரீனா வில்லியம்ஸிடம், அவர் தோல்வியடைந்தார். அதன்பின் வீனஸ் வில்லியம்ஸ் ஒரு முறை கூட ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதிக்கே முன்னேறவில்லை. 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் அரையிறுதிக்கு வீனஸ் வில்லியம்ஸ் தகுதி பெற்றுள்ளார்.

இன்று காலை நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவின் மற்றொரு கால் இறுதி போட்டியில் ஸ்பெயினின் கார்பைன் முகுருசா-அமெரிக்காவின் கோகோ வண்டேவெஜ் ஆகியோர் மோதினர். இதில் வெற்றி பெறுபவருடன் அரையிறுதியில் வீனஸ் வில்லியம்ஸ் பலப்பரீட்சை நடத்துவார். இதனிடையே செரீனா வில்லியம்சும் நடப்பு தொடரில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். கால் இறுதியில் அவர் பிரிட்டனின் ஜோஹன்னா கோண்டாவை எதிர்கொள்கிறார். செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோர் தொடர்ந்து வெற்றி பெறும் பட்சத்தில், அவர்கள் இருவரும் மீண்டும் ஒரு முறை இறுதி போட்டியில் மோதும் சூழல் உருவாகலாம் என டென்னிஸ் ரசிகர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response