விளையாட்டு
Now Reading
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி!
0

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி!

by Sub EditorMarch 7, 2017 4:11 pm

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், அஷ்வின் ‘சுழலில்’ அசத்த, இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி தந்தது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இரண்டாவது டெஸ்ட், பெங்களூருவில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 189, ஆஸ்திரேலியா 276 ரன்கள் எடுத்தன. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா (79), ரகானே (40) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஸ்டார்க் ஒரு ரன்னில் நடையைக்கட்டினார். மற்ற வீரர்களும் ஏமாற்ற, ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 112 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி வீழ்ந்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக அஷ்வின் 6 விக்கெட் வீழ்த்தினார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response