அரசியல்
Now Reading
ஆளுநர் ஆட்சி நடத்துவதற்கு எதற்கு மக்கள் பிரதிநிதி ?
0

ஆளுநர் ஆட்சி நடத்துவதற்கு எதற்கு மக்கள் பிரதிநிதி ?

by editor sigappunadaApril 17, 2017 10:40 am

டெல்லி யூனியன் பிரதேசத்தில், ஆட்சியாளர்களுக்கும், ஆளுநருக்கும் நடந்த அதிகார மோதலால், யாருக்கு அதிகாரம் என்று நீதிமன்றத்துக்கு சென்றதில், ஆளுநருக்குதான் அதிகாரம் உள்ளது என்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதைத்தொடர்ந்து, புதுச்சேரியையும் பாஜக கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு, ஆளுநர் தலையீடு அதிகரித்து வருகிறது .

பாண்டிச்சேரி நகராட்சி ஆணையர் சந்திரசேகரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் வைத்திலிங்கம் சட்டமன்றத்தில். அரசு அதிகாரியை பணிமாற்றம் செய்ய ஆளுநருக்குதான் அதிகாரம் உள்ளது, ஆட்சியாளர்களுக்கு இல்லை என்று அறிக்கையும், முதல்வர், சபாநாயகர், தலைமை செயலருக்கு கடிதமும் அனுப்பிய ஆளுநர், மீண்டும் சந்திரசேகரை நகராட்சி ஆணையராக பொறுப்பேற்க உத்தரவிட்டார். ஆனால், சபாநாயகரோ அவசர கூட்டத்தை கூட்டி, சபாநாயகர் உத்தரவை நிறைவேற்றுங்கள் இல்லை என்றால் உரிமை பிரச்னை வரும் என்றதும், சந்திரசேகருக்கு பதிலாக அவரது நண்பர் கணேசனை ஆணையராக நியமித்தார்கள் .

மத்தியில் ஆளும் பாஜக-வினர், புதுச்சேரி ஆட்சியாளர்கள் தங்களுக்குதான் அதிகாரம் உள்ளது என்று நீதிமன்றம் செல்வார்கள். டெல்லி நீதிமன்ற உத்தரவை காட்டி ஆளுநருக்குதான் அதிகாரம் என்ற உத்தரவை வாங்கி காங்கிரஸ் ஆட்சியை டம்மியாக்கலாம் என்று பாஜக-வினர் திட்டமிட்டனர். ஆனால் முதல்வர் நாராயணசாமி வழக்கறிஞர் என்பதால் நீதிமன்றம் போவதை தவிர்த்தார்.

ஆட்சியாளர்கள் நீதிமன்றம் போகாததால், ஆளுநர் கிரண்பேடி, செயலாளர் தேவநீதி தாஸ் மூலமாக சென்னை உயர் நீதிமன்றத்தின் படியேறியுள்ளார் புதுச்சேரி மக்கள் ஆட்சியை டம்மியாக ஆக்குவதற்கு. இந்நிலையில், ஆளுநர் ஆட்சி நடத்துவதற்கு தேர்தல் நடத்தி மக்கள் பிரதிநிதிகளை எதற்காக தேர்வு செய்யவேண்டும். தேர்தல் செலவுக்கு மக்கள் வரி பணத்தை எதுக்கு விரயமாக்க வேண்டும் என்கிறார்கள் புதுச்சேரி மக்கள்.

இதையும் படிச்சிருங்க !
பிரியாணிக்கான சண்டையால் நின்று போன திருமணம் - பெண் வீட்டார் அசைவ உணவை வழங்காததால் ஏற்பட்ட பிரச்சினையில், மீரட்டின் முஸாஃபர் நகர் கிராமத்தில் நடைபெற இருந்த திருமணம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்துத் திருமணப் பெண் நக்மா Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response