மாவட்டம்
Now Reading
ஆறு ஏக்கரை கபளீகரம் செய்த திமுக பிரமுகர்!
0

ஆறு ஏக்கரை கபளீகரம் செய்த திமுக பிரமுகர்!

by Sub EditorMarch 21, 2017 12:33 pm

அரசியல்வாதிகள் பதவிக்கு வருவதே அரசு சொத்தையும், பணத்தையும் கொள்ளையடிக்கக்தான் என்ற குரல் சர்வ சாதாரணம். மக்கள் பிரதிநிதியாக இருக்கும் திமுக பிரமுகர் ஒருவர் அரசு இடத்தை கபளீகரம் செய்திருக்கிறார்.
மேற்குதாம்பரம் முடிச்சூர் சாலையிலிருந்து இரும்புலியூர் செல்லும் சர்வீஸ் ரோட்டில் வலது புறத்தில் இரும்புலியூர் சுரங்கபாதை அருகில் இந்து அறநிலை துறைக்கு சொந்தமான சுமார் 6 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த இடம் 20 வருடங்களுக்கு முன்பு விளையாட்டு மைதானமாக இருந்தது. தி.மு.க.ஆட்சியில் இருந்தபோது தாம்பரம் தி.மு.க.வின் முக்கிய பெரும்புள்ளி ஒருவரும், அப்போதைய தி.மு.க. நெடுஞ்சாலை துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்கு நெருக்கமானவருமானவர் அவர். அவருக்கு அந்த இடத்தின் மீது ஒரு கண். உடனே திட்டம் போட்டார். தனது அதிகாரத்தை பயன்படுத்தி ‘கட்டணம் வாகன நிறுத்தம்’ என்று போர்டு வைத்துவிட்டார்.
ரெட்டியார் சமூகத்தை சேர்ந்த இவரது உறவினர்களின் நிலம்தான் சுற்றிலும் இருக்கிறது. இதை அறிந்த அப்பகுதி மக்களும், மற்ற கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், காஞ்சிபுரம் தி.மு.க. மாவட்டசெயலாளர் தாமோ. அன்பரசனுக்கு வேண்டாதவர் என்பதால் அப்போதைக்கு அந்த எண்ணம் கை கூடாமல் போய்விட்டது.
பின்பு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, சின்னையா அமைச்சரானதால், அந்த இடம் அப்படியே கிடப்பில் இருந்தது. இதனால் அந்த இடம் அப்படியே புதர் மண்டி அடர்ந்த காடு போல் காட்சியளித்தது. ஆனால் அவரது உறவினர்களை வைத்து தனது கட்டுப்பாட்டில் வைத்து வந்தார். இதனால்அந்த இடத்தை சமூக விரோதிகள் தகாத செயல்களுக்கு பயன்படுத்தி வந்தனர். விசயம் தெரிந்த தாம்பரம் போலீசார் கூட கண்டுகொள்ளாமல் இருந்ததுதான் கொடுமை.
சீமைகருவேல மரங்களை அகற்ற உத்தரவு போட்டவுடன் அப்பகுதிமக்கள் அந்த இடத்தில் உள்ள மரங்களை அகற்ற முயன்றபோது, இதுவரை அமைதியாக இருந்த திமுக புள்ளி, திடீரென மீடியாவின் முன் தோன்றி, “செலவில் ஒருபகுதியை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று விளம்பரம் செய்தார்.
“இவர் நினைத்திருந்தால் முன்பே இதை செய்திருக்கலாம். நீதிமன்றம் உத்தரவு போட்டப் பிறகாவது செய்திருக்கலாம். பொதுமக்கல் அந்த இடத்திற்குள் நுழைந்த பிறகு ஓடோடி வந்து சொல்கிறார். இடம் கைவிட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காக பகல் வேசம் போடுகிறார். இதை வைத்து அரசியலில் கரை சேர நினைக்கிறார்.” என்று அப்பகுதி மக்கள் அவரை நோக்கி விரல் நீட்டுகின்றனர். கடந்தமுறை இவர் தோல்வியை தழுவியதற்கு பொதுமக்களிடம் இவருக்கு இருந்த பெயர் அப்படியாம்.

– ராஜ்

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response