மாவட்டம்
Now Reading
ஆர்.கே.நகர் முழுவதும் விடிய விடிய பணப்பட்டுவாடா
0

ஆர்.கே.நகர் முழுவதும் விடிய விடிய பணப்பட்டுவாடா

by editor sigappunadaApril 5, 2017 12:12 pm

ஆர்.கே.நகரில் விடிய விடிய பணப்பட்டுவாடாவில் தினகரன் ஆதரவாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.11,18,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆர்.கே.நகரில் தினகரன் ஆதரவாளர்கள் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாக ஓ.பி.எஸ் அணியினர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் காலை 6.30 மணிக்கு பறக்கும் படையினர் மற்றும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.1,28,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட 5 பேர் நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஆர்.கே.நகரில் தங்கி பணப்பட்டுவாடா செய்து வந்தனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. நேற்று இரவு கொருக்குப்பேட்டை அஜிஸ் நகரில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட தினகரன் ஆதரவாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.9,90,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட 4 பேரும் ஈரோடு மாவட்டம் கோபிச்சட்டிபாளையத்தை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட சிவகாமி நகர் உள்ளிட்ட இடங்களில் வேட்பாளர் தினகரன் தரப்பினர் வீடு கட்டி தருவதற்காக வாக்காளர்களின் பெயர் விவரங்களை பிரத்யேக படிவங்கள் சேகரித்ததாக திமுகவினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response