க்ரைம்
Now Reading
ஆபத்தை விளைவிக்கும் கிரில் சிக்கன்?
0

ஆபத்தை விளைவிக்கும் கிரில் சிக்கன்?

by editor sigappunadaJanuary 7, 2017 8:15 pm

உணவுக்கட்டுப்பாடுதான் நோயைக் குணப்படுத்தும் முதல் காரணி என்பதால், மருத்துவர்கள் உணவுக்கட்டுப்பாட்டை சிகிச்சைக்கு வரும் நோயாளி அனைவரிடத்திலும் வலியுறுத்துகின்றனர். சிலர் மருந்து, மாத்திரை உட்கொள்ளாமல் உணவுக்கட்டுப்பாடு மூலமே தங்கள் ஆரோக்கியத்தை பேணி வருகின்றனர்.

இந்நிலையில்,மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கிரில் சிக்கன் சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் கிரில் சிக்கனை சாப்பிட்டாதவர்களை விட, சாப்பிட்டவர்களின் இறப்பு விகிதம் அதிகம் என அந்த ஆய்வு கூறுகிறது.

அமெரிக்க வடக்கு கரோலினா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதுகுறித்து ஆய்வொன்று மேற்கொண்டனர். அதில், அதிக வெப்பநிலையில், தீயில் வாட்டிய சிக்கனை சாப்பிடும்போது, அதிலுள்ள புற்றுண்டாக்கக் கூடிய அரோமேடிக் ஹைட்ரோகார்பன்கள், பாலி-சைக்ளிக் இரசாயனங்கள் அதிகளவில் உடம்பில் சேரும் என்றும் அதனால் அதிகளவில் புற்று செல்கள் உண்டாகுமென்று அந்த ஆய்வு கூறுகிறது.

இந்நிலையில், ஏற்கனவே மார்பக புற்றுநோய் உள்ளவர்கள் கிரில் சிக்கனை சாப்பிடும்போது,புற்று செல்கள் கூடுதலாகி, அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என அந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

அதிக வெப்பநிலையில் வாட்டிய சிக்கனை சாப்பிட்ட 1500 பெண்களில், அடிக்கடி வாட்டிய சிக்கனை சாப்பிட்ட 39.7% பெண்கள் உயிரிழந்துள்ளதை இந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response