Now Reading
ஆன்லைன் அதிர்ச்சி? தீவிரவாதத்தில் சிக்க வைக்கும் அபாயம்!
0

ஆன்லைன் அதிர்ச்சி? தீவிரவாதத்தில் சிக்க வைக்கும் அபாயம்!

by Sub EditorMarch 21, 2017 12:53 pm

தெருமுனையில் இருக்கும் அண்ணாச்சி கடையில் பொருள் வாங்கும் நிலை மாறி, குண்டூசி கூட ஆன்லைனில் வாங்கும் பழக்கம் பெருகி வந்துவிட்டது. நவீன தொழில்நுட்பம் இந்த வசதிகளை கொண்டுவந்துவிட்டது. அதில் என்ன ஆபத்து இருக்கிறது என்று சிந்திப்பது இல்லை. அதனால் பெரும் ஆபத்து இருக்கிறது என்ற திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.

ஆன்லைன் ஆபத்துக்கள் குறித்து சமூக ஆர்வலர் ஒருவர், “லோன் வேண்டுமா என்பது தொடங்கி, ஹோட்டல் அறை புக்கிங், டூர் பேக்கேஜ் என எல்லாவற்றுக்கும் போன் மூலம் மார்க்கெட்டிங் செய்யப்படுகிறது. சில சமயம் ஒரு ஊரில் தங்குவதற்கு அறை வேண்டும் என்று தேடியிருப்பீர்கள்.
சில நிமிடங்களிலேயே இந்த ஊரில் அல்லது பகுதியில் ஓட்டல் அறைகள் உங்கள் பட்ஜெட்டுக்குள் வாடகைக்கு கிடைக்கும் என எஸ்எம்எஸ் வரும். சில நேரங்களில் போனில் யாராவது தொடர்பு கொண்டு, ‘‘என்ன சார், ரூம் வேண்டுமா?. எங்களிடம் உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் ரூம்கள் கிடைக்கும். ஆஃபர்களும் இருக்கிறது. முயற்சி செய்து பார்க்கிறீர்களா?” என வலை வீசுவார்கள். இதுபோல், நீங்கள் ஆன்லைனில் ஒரு பொருளை வாங்கியிருப்பீர்கள். இன்டர்நெட்டில் நீங்கள் பதிவு செய்து வைத்துள்ள ஆன்லைன் விற்பனை இணையதளத்தில் தேடியிருப்பீர்கள். இது பற்றி எஸ்எம்எஸ் அல்லது இமெயிலில் ஆஃபர்கள் குவியலாம். இதுவெல்லாம் காக்கை உட்கார பனம் பழம் விழுந்த மாதிரியா? அல்லது நம் எண்ணத்தை அறிந்து இப்படியொரு டீல் வருகிறதே என்று நீங்கள் குழம்பியிருப்பீர்கள். ஆனால் ஓடுகிற ஓட்டத்தில் அதை விட்டு விடுவீர்கள்.

நமக்கு இது தேவை என்பது இத்தனை பேருக்கு எப்படி தெரியும்? என்று யோசித்தது உண்டா? இது எல்லாமே டேட்டா புரோக்கர்கள் வேலைதான்.
நீங்கள் ஆன்லைனில் யாரோ ஒருவரிடம் கொடுக்கும் தகவல் இந்த டேட்டா புரோக்கர்களால் மற்றவர்களுக்கு அடுத்த சிலநிமிடங்களில் விற்கப்படுகிறது. உங்கள் போன் நம்பர், ஈ.மெயில், முகவரி உள்ளிட்ட அனைத்து தகவலும் ஒருவரிடம் அல்ல… பல பேரிடம் கொடுக்கப்படுகிறது. மிக சொற்ப விலைக்கு விற்கப்படுகிறது.
உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் தகவல்கள் திருடப்பட்டு விற்பனை செய்து இலாபம் பார்த்து வருகிறது ஒரு கும்பல். இது பெரிய ஆபத்து.” என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.  எப்படி ஆபத்து?

உங்கள் தகவலை சமூக விரோதிகள் சமூக விரோத காரியங்களுக்கு பயன்படுத்தலாம். தீவிரவாத கும்பல் இதைப் பயன்படுத்தி உங்களை சிக்க வைத்து விட்டு தப்பிக்கலாம் என்று அதிர்ச்சி கொடுக்கின்றனர் இணையதள நிபுணர்கள்.
ஒரு லட்சம் பேரின் பெயர், முகவரி, போன் நம்பர்கள் வெறும் ரூ.10,000 முதல் ரூ.15,000க்கு விற்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, டெல்லி, ஐதராபாத் நகரங்களில் இந்த திருட்டு டேட்டாக்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்துள்ளது.
டெல்லி, என்சிஆர், பெங்களூருவில் 1.7 லட்சம் பேரின் கிரடிட் கார்டு பற்றிய தகவல்கள் 7,000 ரூபாய்க்கு விற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் ஆன்லைன் நிறுவனத்தில் பொருள் வாங்கிய சென்னை புறநகரைச் சேர்ந்த ஒருவருக்கு, அவர் வசிக்கும் பகுதியிலிருந்து இது நீங்கள் செய்த ஆர்டர்தானா? பொருள் சரிதானா என்று கேட்டு போன் வந்ததும் அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார்.
முடிந்த வரை தகவல்களை பாதுகாப்பற்ற இணையதள வெளியில் பதிவு செய்வதை தவிர்ப்பது நல்லது என்று நவீன தொழிநுட்ப நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

– அமான்

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response