மாவட்டம்
Now Reading
ஆதார் கட்டாயமா? இல்லையா? குழப்பும் அரசு
0

ஆதார் கட்டாயமா? இல்லையா? குழப்பும் அரசு

by editor sigappunadaJune 19, 2017 3:58 pm

கோர்ட்டில் ஆதார் கட்டாயமில்லை என்று அரசு கூறுகிறது. ஆனால் ஒருபக்கம் எல்லாவற்றிற்கும் ஆதார் கட்டாயம் என்று வற்புறுத்துகிறது அரசு.

ரிசர்வ் வங்கியின் ஆணைப்படி, வங்கிகளில் சேமிப்புக் கணக்கு தொடங்க சமர்ப்பிக்கப்படும் பல்வேறு ஆவணங்களில் ஆதாரும் ஒன்று. பாஸ்போர்ட், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றைக்கொண்டும் வங்கிக் கணக்கு தொடங்க இயலும். ஆனால், நாட்டின் ஒரு சில வங்கிகளில் ஆதார் கார்டு இல்லாமல் வங்கிக் கணக்கு தொடங்க வங்கிகள் அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மும்பையின் சில பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு ஆதார் கட்டாயம் என்று வாய்மொழியான ஆணைகள் வந்துள்ளதாக அவ்வங்கி அதிகாரிகள் சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால், ஆதார் கட்டாயம் என்பதை ரிசர்வ் வங்கி மறுக்கிறது.

நாட்டின் முன்னணி வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி. உள்ளிட்ட வங்கிகளில்கூட ஆதார் கட்டாயமாக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. ஹெச்.டி.எஃப்.சி. வங்கியில் சேமிப்புக் கணக்குத் தொடங்குவதற்காக பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களுடன் வந்த ஒருவர், ஆதார் இல்லை என்ற காரணத்துக்காக வங்கிக் கணக்கு தொடங்காமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். ஆனால், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு கேட்கும்போது, ஆதாரை நாங்கள் கட்டாயமாக்கவில்லை என்றும், ஆதாரையும் வங்கிக் கணக்கில் இணைக்க வாடிக்கையாளர்களை ஊக்குவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த இரட்டை வேடம் எதற்காக?

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response