மாவட்டம்
Now Reading
அ.தி.மு.க நடராஜனுடைய பாட்டன் சம்பாதித்த சொத்து அல்ல -கே.பி. முனுசாமி காட்டம்
0

அ.தி.மு.க நடராஜனுடைய பாட்டன் சம்பாதித்த சொத்து அல்ல -கே.பி. முனுசாமி காட்டம்

by editor sigappunadaJanuary 25, 2017 2:35 pm

 

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் உள்ள இல்லத்தில் வைத்து முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நடராஜன் தஞ்சையில் நடத்திய பொங்கல் விழாவில், ஜெயலலிதா அவர்களை பற்றியும், அ.தி.மு.க. பற்றியும், என்னை பற்றியும் சில கருத்துக்களை கூறி இருக்கிறார். அந்த சில கருத்துக்களில் கண்டிக்கத்தக்க கூடிய கருத்துக்கள் சில இருக்கின்ற காரணத்தினால் அதற்கு பதில் சொல்லக் கூடிய நிலையிலேயே நான் உள்ளேன்.

முதலில் ஜெயலலிதா அவர்கள், நடராஜனை எந்த நிலையில் வைத்திருந்தார்கள் என்பதை நான் இங்கு விளக்கி ஆக வேண்டும்.

பொதுவாக அ.தி.மு.க.வில் இருக்கின்ற நிர்வாகிகள் ஆனாலும் சரி, தொண்டர்கள் ஆனாலும் சரி, தி.மு.க.வில் இருக்கின்ற நிர்வாகிளோடு அல்லது அதன் தலைவர்களோடு அரசியல் ரீதியாக தொடர்பு வைத்திருந்தால் என்று தெரிந்தால் அவர்களிடத்தில் இருந்த பொறுப்பை உடனடியாக நீக்கி விடுவார். தொடர்ந்து தொடர்பு வைத்திருந்தால் கட்சியில் இருந்து நீக்கி விடுவார்.

அதற்கு ஒப்பாக நடராஜன் அவர்களுடன் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் யாராவது தொடர்பு வைத்திருந்தால் அப்படி தொடர்பு வைத்திருப்பவர்களின் பதவிகள் உடனடியாக பறிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து தொடர்பு வைத்திருந்தால் அவர்கள் கட்சி இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே ஜெயலலிதா அவர்களால் 1990-ல் வெளியேற்றப்பட்டவர் நடராஜன். அப்படிப்பட்ட நடராஜன் அந்த பொங்கல் விழாவில் பேசும்போது நாங்கள் எங்கள் குடும்பம் அ.தி.மு.க.வை 33 ஆண்டுகளாக தோளில் சுமந்திருந்தோம் என்றார்.

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்பு ஜெயலலிதா கட்சியில் பதவி ஏற்கும் போது கட்சியில் 17 லட்சம் தொண்டர்கள் தான் இருந்தார்கள். அவர் மறைவிற்கு பின்பு 1 கோடியே 50 லட்சம் தொண்டர்களை உருவாக்கி தந்துள்ளார். அப்படிப்பட்ட கட்சியை பற்றி உண்மைக்கு புறம்பான கருத்துக்களை நடராஜன் கூறி வருகிறார். அ.தி.மு.க.எங்கள் கட்சி, எங்கள் சொத்து என்கிறார்.

அவருடைய பாட்டன் சம்பாதித்த சொத்து அல்ல. அ.தி.மு.க. 1 கோடியே 50 லட்சம் தொண்டர்களுடைய சொத்து.

எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து விலகியபோது நாங்கள் அந்த காலத்தில் கூட்டம் போட்டால் கையில் காசு இல்லாவிட்டாலும் கூட வீட்டில் இருக்கும் நகைகளை அடகு வைத்து கட்சியின் ஈடுபட்டாக கூட்டத்தை சந்தோசமாக நடத்தினோம். கட்சியை வளர்த்தோம்.

நான் நக்சலைட்டாக இருந்ததாக நடராஜன் கூறி இருக்கிறார். இது அபாண்டமான குற்றச்சாட்டு. ஜெயலலிதா இருக்கும் வரை போயஸ் கார்டன் இருக்கும் திசை பக்கமே நடராஜன், திவாகரன் வந்ததில்லை.

நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, நடராஜனும் சேர்ந்து கட்சியில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். இதில் கழக பொது செயலாளர் நேரடியாக தலையிட்டு இவர்களுடைய செயல்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

ஜல்லிக்கட்டுக்கு மிகப் பெரிய அறப்போட்டம் நடைபெற்றது. இந்திய சுதந்திரம் பெற்ற பிறகு தமிழகத்தில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் இது.

உலகமே திரும்பி பார்த்த அறப்போராட்டம். இந்த போராட்டத்தில் இருந்தவர்கள் உனர்வுகளை புரிந்து கொண்டு முதல்- அமைச்சர் பன்னீர் செல்வம் முறையாக கையாண்டுள்ளார். முதல்-அமைச்சர் சிறப்பாக செயல்பட்டதால் 36 மணி நேரத்தில் அவசர சட்டம் கொண்டு வந்துள்ளார்.

தம்பிதுரை தனியாக எம்.பி.க்களை அழைத்துக்கொண்டு சென்று பார்க்கிறார். முதல்- அமைச்சருடன் தம்பிதுரை செல்லாமல் ஏன்? தனியாக செல்கிறார். ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த மாதிரி போவாரா?

மத்திய, மாநில உறவுகள் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. பிரதமருக்கும் முதல்- அமைச்சருக்கும் உள்ள உறவை தம்பிதுரை சீர்குலைக்க பார்க்கிறார். நடராஜனும், தம்பிதுரையும் பிரதமரை விமர்சித்து கட்சிக்குள் குழப்பத்தை உண்டு பண்ண பார்க்கிறார்கள். இவர்களை 2 பேரையும் பொது செயலாளர் கண்காணிக்க வேண்டும்.

பிரதமர் தமிழகத்தில் நிறைய உதவிகள் செய்து வருகிறார். தம்பிதுரையும் நடராஜனும் தான் பிரதமரை குறை கூறி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response