சினிமா
Now Reading
அவர் வருவாரா? ரஜினிக்காக காத்திருக்கும் படக்குழு
0

அவர் வருவாரா? ரஜினிக்காக காத்திருக்கும் படக்குழு

by editor sigappunadaMarch 26, 2017 10:03 am

பாகுபலி 2 டீசர் ரிலீஸில்  ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது, பாகுபலி 2 இந்தியத் திரைப்படம். அதனால் இந்திய பிரபலங்கள் மட்டும் இந்தப்படத்தைப் பற்றிப் பேசினால் போதும் என ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்தார் இயக்குநர். அதன் தொடர்ச்சியாக, இந்தியில் ராஜமௌலியை அடுத்தப் படத்துக்கு அழைத்த ஷாருக் கான், சல்மான் கான் ஆகிய நடிகர்களைத் தொடர்புகொண்டார்கள். அதே சமயம் தமிழில் ரஜினிகாந்த் வருகை தந்து, பாகுபலி 2 பாடல்களை ரிலீஸ் செய்துகொடுத்தால் சிறப்பாக இருக்குமென நினைத்து ரஜினியைத் தொடர்புகொண்டார்கள். அந்தச் சமயத்தில் ரஜினி, லைகாவின் இலங்கைப் பயணத்தில் கமிட் ஆகியிருந்தார். அதனால், பாகுபலி 2 பாடல்கள் ரிலீஸில் கலந்துகொள்ள முடியாது என்று தெரிவித்தார். ஆனால், என்னால் முடிந்தவகையில் இந்தியாவின் மிக முக்கியத் திரைப்படமான பாகுபலி 2-வுக்கு தனது ஆதரவைக் கொடுப்பேன் என்றும் உறுதி கூறினார்.

இப்போது, ரஜினியின் இலங்கைப் பயணம் ரத்தானதிலிருந்து பாகுபலி 2 பாடல்கள் ரிலீஸுக்கு ரஜினியைக் கொண்டுவந்து விடவேண்டுமென ஆந்திராவிலிருந்து முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் நடைபெறும் பாகுபலி 2 பாடல்கள் ரிலீஸில் ரஜினி கலந்து கொள்வது உறுதியா? என்பது விரைவில் தெரியவரும்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response