மாவட்டம்
Now Reading
அலங்காநல்லூர் – பாலமேட்டில் ஜல்லிக்கட்டு ஒத்திவைப்பு!
0

அலங்காநல்லூர் – பாலமேட்டில் ஜல்லிக்கட்டு ஒத்திவைப்பு!

by Sub EditorJanuary 27, 2017 8:02 pm

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கக்கோரி தமிழ்நாடு முழுவதும் மாணவர்களின் போராட்டத்தால் ஜல்லிக்கட்டு நடத்திட தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி அலங்காநல்லூரிலும், பிப்ரவரி 2-ம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என விழாக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் மீதான விசாரணை வருகின்ற 31-ம் தேதி (செவ்வாய்) உச்சநீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு பகுதிகளில் நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு ஒருவாரம் ஒத்திவைக்கப்படுவதாகவும், முதல்வரை சந்தித்தபின் ஜல்லிக்கட்டுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் விழாக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response