மாவட்டம்
Now Reading
அலங்காநல்லூரில் இயல்பு நிலை திரும்பியது
0

அலங்காநல்லூரில் இயல்பு நிலை திரும்பியது

by editor sigappunadaJanuary 24, 2017 11:11 am

 

ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டத்தால் கடந்த ஒருவாரகாலமாக தமிழகம் ஸ்தம்பித்தது. இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டை நடத்த தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது.

இதன்மூலம் ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கிவிட்டது. எனவே அனைவரும் போராட்டத்தை கைவிடுங்கள் என அரசு வேண்டுகோள் விடுத்தது. இதனை ஏற்று சில இடங்களில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூரில் போராட்டம் நீடித்தது. இதனால் போலீசார் நேற்று போராட்டக்காரர்களை அகற்ற முயன்றபோது அவர்கள் கல்வீசி தாக்கினர். இத னால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இதனால் நேற்று அலங்காநல்லூர் பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் காவல் துணை கண்காணிப்பாளர் விஜய பாஸ்கர், அலங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் ஆகியோர் காயம் அடைந்தனர். தடியடியில் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயம் அடைந்தனர்.

போராட்டக்காரர்கள் கலைந்து சென்றதால் அலங்காநல்லூர் சற்று அமைதியானது. 8 நாட்களுக்கு பிறகு இன்று காலை அங்கு இயல்பு நிலை திரும்பியது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response