சினிமா
Now Reading
“அரைகுறை ஆடையுடன் போஸ் கொடுப்பது சமூக சேவையா-?” – வலைவீச்சில் அனல்
0

“அரைகுறை ஆடையுடன் போஸ் கொடுப்பது சமூக சேவையா-?” – வலைவீச்சில் அனல்

by Sub EditorMarch 4, 2017 2:44 pm

நடிகை பாவனா பலாத்கார கொடுமைக்கு ஆளானது வேதனையான விசயம். அது வருத்தத்துக்குறியது. அதேபோல சிறுபெண் குழந்தைகள் கூட பாலியல் கொடுமைக்கு ஆளாவதும் கண்டிக்கத்தகக்து, நிச்சயம் தண்டிக்கவும்பட வேண்டியதுதான்.
இந்த விவகாரத்தில் நடிகை வரலட்சுமி தான் பட்ட வேதனையை துணிச்சலாக கூறினார் என்று பாராட்டுக்களும் குவிகின்றன.

இப்படி ஆதரவு குரல் எல்லாப் பக்கமும் கேட்டுக் கொண்டிருக்க, எதிர்குரலும் கேட்கிறது. சமூக வலைதளவாசி அதிரடி பரந்தாமன் என்பவர், “நடிகை பாவனாவுக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமைக்கு வேதனைபடுகிறேன். அந்த தவறை செய்தவர்கள் தண்டனைக்குறியவர்கள். ஆனால், ஒரு நடிகை என்பதற்காக இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்வது சரியாக படவில்லை. கேரள திரையுலகம் திரண்டு போராடுவதும், தமிழ் திரை பிரபலங்கள் பொங்கி எழுவதும், பாவனாவுக்காக கேரள சட்டசபையில் அமளி ஏற்படுத்துவதும் ரொம்பவே ஓவராக இல்லையா? இந்த அழுத்தம் மிகவும் கொடூரமாக கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட நந்தினிக்காக வரவில்லையே?. 7 வயது சிறுமி ஹாசினிக்காக வரவில்லையே?பெண்களும் சிறுமிகளும் பாலியல் கொடுமைக்கு ஆளாவதற்கு மிக முக்கிய காரணம் சினிமாதான் என்பதை மறந்துவிட்டு நடிகர்கள், நடிகைகள் பேசலாமா? அரைகுறை ஆடையுடன் நடிப்பதால் சிறுவர்கள், இளைஞர் மனதில் காமம் விதைக்கப்படுகிறது. அதனால்தான் அவர்கள் இந்த நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதை மறுக்க முடியுமா? சினிமாவில் வரும் ஆபாசங்களில் நடிப்பது நடிகைகள் தானே, அதைப் பார்த்து இளைஞர்கள் கெட்டுப் போகிறார்கள் அல்லவா! இதுவரை சமூகத்தில் மற்றவர்கள் பாதிக்கப்பட்டார்கள், இப்போது அது நடிகைகளையே திருப்பித் தாக்குகிறது. அதற்காக பாவனா விவகாரத்தையோ, வரலெட்சுமி விவகாரத்தையோ நான் நியாயபடுத்தவில்லை. சினிமாவில் ஆபாசம் ஒழிய வேண்டும் என்பதுதான் என் கருத்து” என்று அழுத்தமாக கூறியுள்ளார்.

தமீம் அன்சாரி என்பவர், “கவர்ச்சியான போட்டோ எடுப்பது குற்றமென்றால், அரைகுறை ஆடையுடன் சிரித்துக் கொண்டே போஸ் கொடுப்பது என்ன சமூக சேவையா? காமத்தை தூண்டும் வகையிலும் ,கிளுகிளுப்பை ஏற்படுத்தும் வகையிலும் நடிப்பதை நிறுத்தினால் ஓரளவுக்காவது இந்தக் குற்றங்கள் குறைய வாய்ப்பிருக்கிறது. அதேபோல இரட்டை அர்த்த வசனங்கள், மோசமான அங்க அசைவுள்ள குத்துப்பாட்டு டான்ஸ் இவையெல்லாம் சிறு குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கின்றன. அது திரும்ப எதிர்வினையாற்றும் போது வேதனையாக இருக்கிறது. சினிமா மட்டுமே காரணம் என்பதல்ல என் விவாதம். சினிமாதான் அதிகபட்ச காரணமாக இருக்கிறது. இவையெல்லாவற்றையும் தாண்டி எங்கள் எல்லாரையும் விட சினிமாக்காரர்களுக்குத்தான் சமூக அக்கறை அதிகம் இருக்க வேண்டும். ஏனென்றால் சினிமா என்ற ஊடகம் மிகவும் கவரும் பிரமாண்ட ஊடகமாக இருக்கிறது” என்று தன் பதிவை முடிக்கிறார்.

இந்தக் கருத்தை எதிர்கருத்தாக பார்க்காமல், சமூக அக்கறையுள்ள கருத்தாக எடுத்துக் கொண்டு சரிசெய்ய முற்பட்டால், நாளைய தலைமுறை நிச்சயம் நல்லபடியாக வளரும்.

– எஸ்.நேத்ரா

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response