சினேகா தூபே Vs சைமா சலீம்: காஷ்மீர் விவகாரத்தில் தாய்நாட்டுக்காக குரல் கொடுத்த இந்தியா, பாகிஸ்தான் பெண்கள் – sigappanada.com

ஐ.நா அவையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியா தொடர்பாக வெளியிட்ட கருத்துகளுக்கு எதிர்வினையாற்றும் வகையில் கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி இந்திய வெளியுறவு அதிகாரி சினேகா தூபே பேசிய காணொளி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதேபோல, பாகிஸ்தான் சார்பில் பேசிய அந்நாட்டின் வெளியுறவு அதிகாரி சைமா சலீமின் காணொளியும் வைரலாகி வருகிறது. சர்வதேச மன்றங்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொள்வதும் பிறகு அந்த நாடுகளின் பிரதிநிதிகள் அந்த குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதும் வழக்கமான ஒன்றுதான். இம்முறை, அத்தகைய குற்றச்சாட்டை சுமத்திய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பதில் அளிக்கும் வகையில் தமது நுனிநாக்கு ஆங்கிலத்தில் கடுமையாகவே எதிர்வினையாற்றியிருக்கிறார் இந்திய அதிகாரி சினேகா தூபே.

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்ஷெட்பூரை பூர்விகமாகக் கொண்டவர் சினேகா தூபே. இவரது தந்தை ஒரு பொறியியலாளர். தாயார் ஆசிரியர். கோவாவில் பள்ளிப்படிப்பை முடித்த சினேகா, புணேவில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பும் டெல்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்வதே விவகாரங்கள் துறையில் ஆய்வுப்பட்டமும் பெற்றார். மத்திய பொதுப்பணித்துறை தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வில் முதல் முயற்சியிலேயே இவர் 2011ஆம் ஆண்டில் வெற்றி பெற்றார்.

2012இல் இவருக்கு இந்திய வெளியுறவுப் பணி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறையில் பணியில் சேர்ந்த இவர் இளநிலைச் செயலாளராக சில ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் ஸ்பெயினின் மேட்ரிட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் மூன்றாவது செயலாளர் ஆக பணியாற்றினார். பிறகு இரண்டாம் நிலை செயலாளராக இருந்து முதலாம் நிலை செயலாளராக பதவி உயர்வு பெற்று ஐ.நாவில் உள்ள இந்திய நிரந்தர பிரதிநிதி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.

Previous post பலதார திருமணம்: “எனக்கு பல காதலர்களும் துணைவர்களும் தேவைப்படுவது ஏன்?”
Next post அதிகாரத்தை பெற ஒன்றிணைந்து செயல்பட வலியுறுத்திய இந்திய வெளிவிவகார செயலாளர்