மாவட்டம்
Now Reading
அமைச்சர் செல்லூர் ராஜுவின் அடுத்த அதிரடி ஆரம்பம்
0

அமைச்சர் செல்லூர் ராஜுவின் அடுத்த அதிரடி ஆரம்பம்

by editor sigappunadaMay 5, 2017 10:57 am

மதுரையில் சித்திரை திருவிழா நடக்கவிருப்பதை முன்னிட்டு செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன் மற்றும் ராஜன் செல்லப்பா ஆகிய அமைச்சர்கள் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைப் பார்வையிட்டனர்.

இதற்காக மதுரை வந்த அமைச்சர்கள் முதலில் மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தனர். பின்னர் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவுக்காகச் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளை பார்வையிட்டனர். வைகை ஆற்றையும் அழகர் ஆற்றில் இறங்கும் பகுதிகளையும் பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் மதுரையில் தண்ணீர் பஞ்சம் உச்சம் பெற்றிருக்கும் இந்நிலையில் சித்திரை திருவிழாவுக்காக என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு செல்லூர் ராஜூ, “போன வருடம் அழகர் எப்படி ஆற்றில் இறங்கினாரோ அப்படியேதான் இந்த வருடமும் இறங்குவார்” என பதிலளித்தார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response