மாவட்டம்
Now Reading
அமைச்சர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள்
0

அமைச்சர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள்

by editor sigappunadaJanuary 10, 2017 10:40 am

69745ff

வறட்சி பாதிப்பு குறித்து ஆய்வு செய்யச் சென்ற மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் என்.நடராஜன், திருச்சி மாவட்டத்தில் யாரும் வறட்சி யால் உயிரிழக்கவில்லை என்று கூறியதைக் கண்டித்து, நேற்று அவரது அலுவலகத்துக்குள் புகுந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலரண் சாலையில் உள்ள திருச்சி கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்துக்குள் தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ம.ப.சின்னத்துரை தலை மையில் சுமார் 20 விவசாயிகள் நேற்று நுழைந்தனர். அமைச்சரைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பிய அவர்களால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து அங்கு சென்ற போலீஸார், போராட்டத்தைக் கைவிடு மாறு கூறினர். மறுத்த விவசாயிகள் 20 பேரையும் கைது செய்தனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response