சினிமா
Now Reading
அப்போது ரீமேக் ராஜா; இப்போது ஒரிஜினல் ராஜா!
0

அப்போது ரீமேக் ராஜா; இப்போது ஒரிஜினல் ராஜா!

by Sub EditorFebruary 4, 2017 2:57 pm

இயக்குனர் மோகன் ராஜா ஒரு காலத்தில் ரீமேக் ராஜா என்று அழைக்கப்பட்டவர். இப்போது ஒரிஜினல் ராஜா என்று அழைக்கப்படுபவர். பத்திரிகையாளர்களுக்கு பொதுவாக சொல்லப்படும் ஒரு அறிவுரை உண்டு. ‘ஒரு செய்தி. ஒரே ஒரு செய்தி வாழ்க்கையையே மாற்றிவிடும். எந்த செய்தியையும் ஒதுக்கக்கூடாது’ என்பது தான் அந்த அறிவுரை. இதை அடிப்படையாக வைத்து உருவானது தனி ஒருவன். ஒரே ஒரு படத்தில் மோகன் ராஜாவின் வாழ்க்கையே மாறிவிட்டது. சூப்பர் ஹீரோக்களை மக்கள் விரும்பாததையும், ரியாலிட்டி திரைப்படங்களை அவர்கள் ரசிக்கத் தொடங்கிவிட்டதையும், இளம் இயக்குநர்கள் இந்த லைனைப் பிடித்து அதிகம் வெற்றிபெறுவதையும் வைத்து தனது அடுத்தடுத்த திரைப்படங்களை வடிவமைப்பதாகக் கூறியிருக்கும் மோகன் ராஜா, தற்போது சிவகார்த்திகேயன் – நயன்தாரா ஜோடியை வைத்து ஒரு திரைப்படத்தை உருவாக்கிவருகிறார். தனி ஒருவன் திரைப்படத்தில், பதவியும் அதிகாரமும் உள்ள இரு சக்திகளை மோதவிட்ட மோகன் ராஜா, இந்தப் படத்தில் சாமான்ய மனிதன் உணவு சுகாதாரத்துக்காக போராடும் வகையில் கதைக்களத்தை உருவாக்கியிருக்கிறார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response