மாவட்டம்
Now Reading
அனுமதியின்றி ஜல்லிக்கட்டு – மாடு முட்டி பிளஸ்-2 மாணவர் பலி
0

அனுமதியின்றி ஜல்லிக்கட்டு – மாடு முட்டி பிளஸ்-2 மாணவர் பலி

by editor sigappunadaFebruary 20, 2017 10:07 am

 

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே கூடமலை ஊராட்சியில், ஆண்டுதோறும் ஜனவரி மாதம் ஓம் காளியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெறும். இந்த விழாவின் நிறைவாக ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுக்கு தடை காரணமாக போட்டி நடத்தப்படவில்லை.

இந்த ஆண்டு கோவில் திருவிழா கடந்த மாதம் நடந்தது. இருப்பினும் தற்போது ஜல்லிக்கட்டுக்கு தடை நீங்கி உள்ளதால், இந்த ஊராட்சி பொதுமக்கள் ஒன்று கூடி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து போட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. ஆனால் மாவட்ட நிர்வாகம் இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து போலீஸ் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நேற்று நடந்தது. இதையொட்டி, பெருமாள் கோவில் வீதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாடிவாசல் வழியாக காலை 9 மணிமுதல் ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் திமிலை பிடித்து அடக்கினர்.

ஒரு சில காளைகள் அவர்களை பந்தாடியது. பகல் 1 மணி வரை சுமார் 400-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதால் அந்த கிராமம் முழுவதும் மாடுபிடி வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் கெங்கவல்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

இதனிடையே, கந்தசாமி புதூரை சேர்ந்த, மல்லியக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவர் மணிகண்டன் (வயது 17) ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென சீறிப்பாய்ந்த மாடு ஒன்று அவரை மார்பில் முட்டி குத்தியது. இதில் படுகாயம் அடைந்த அந்த மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அங்கு வந்த கெங்கவல்லி போலீசார் ஜல்லிக்கட்டு போட்டியை அதன்பிறகு நடத்த அனுமதிக்கவில்லை. மேலும், மாடு முட்டியதில் இறந்த மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கெங்கவல்லி அருகே தடையை மீறி நடந்த ஜல்லிக்கட்டில், வேடிக்கை பார்க்க சென்ற பிளஸ்-2 மாணவர் மாடு முட்டி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response