சினிமா
Now Reading
அந்த நடிகையா இப்படி செய்துவிட்டார்?
0

அந்த நடிகையா இப்படி செய்துவிட்டார்?

by Sub EditorFebruary 6, 2017 6:37 pm

இன்று சமந்தாவின் மார்கெட், அவரே கையில் பிடிக்கமுடியாத அளவுக்கு எங்கேயோ சென்றுவிட்டது என்றாலும், அவர் ஆரம்பித்த இடம் அனைவரையும்போல நடிப்புக்கான ஆடிஷன்களில் இருந்ததுதான். விண்ணைத் தாண்டிவருவாயா திரைப்படத்தில் சிறு கேரக்டரில் சமந்தாவை நடிக்கவைத்த கௌதம் மேனன், அவரது திறமையைக் கண்டு வியந்து கொடுத்த வாய்ப்பு VTV திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பில் ஹீரோயின் பதவி. அங்கு தொடங்கியவர் இன்று முன்னணி நடிகை என்று மட்டுமல்ல, தெலுங்குத் திரையுலகில் மூன்றாவது தலைமுறையைக் கண்டுவிட்ட நாகார்ஜூனா குடும்பத்தின் மருமகள் ஸ்தானம்.

எத்தனை உயரங்களைக் கண்டாலும் இயல்பு மாறாதவர் சமந்தா என்பதற்கு, பல்லாவரத்தில் இருக்கும் அவரது பாட்டியின் ஓட்டுவீடே உதாரணம். ஆனால், ராம்சரணின் அடுத்த திரைப்படத்தை சமந்தா தயாரிக்கிறார் என்று வெளியான தகவல் இந்த இமேஜை உடைத்தது. சம்பாதித்த பணத்தை மேலும் அதிகரித்து அந்தஸ்தை உயர்த்துகிறார் என்றும், நாகார்ஜுனா குடும்பம் தனது பணத்தை வருங்கால மருமகள் மூலம் முதலீடு செய்கிறது என்றும் வெளியான வதந்திகள் சமந்தாவை சமீப காலங்களாக துரத்திக்கொண்டே இருந்தன. சமந்தா மட்டுமல்லாமல், ராம்சரணின் அடுத்த படத்தைத் தயாரிப்பவர்களுக்கும் இந்த வதந்தி தலைவலியைக் கொடுப்பதால், அவர்களே சில விஷயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளனர். ராம்சரணின் அடுத்த படத்துக்கும் சமந்தாவுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ராம்சரணின் படத்தைத் தயாரிக்க எத்தனையோ தயாரிப்பாளர்கள் காத்திருக்க, சமந்தா அவரது திருமண வேலைகளை விட்டுவிட்டு இந்த வேலையில் தலையிடுவாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.
அப்படியென்றால் அது புரளிதானா?

– நேத்ரா

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response