மாவட்டம்
Now Reading
அதிரடி பிரசாரத்தில் குதித்த பிரியங்கா காந்தி
0

அதிரடி பிரசாரத்தில் குதித்த பிரியங்கா காந்தி

by editor sigappunadaJanuary 25, 2017 11:42 am

 

உத்தரபிரதேசத்தில் 7 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி- காங்கிரஸ் கூட்டணி ஆகியவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேச தேர்தலில் வாக்குகள் சிதறுவதால் பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் என்று கடந்த மாதம் வெளியான கருத்து கணிப்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால் ஆளும் சமாஜ்வாடி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி சேர்ந்த பிறகு அது பா.ஜ.க.வுக்கு கடும் சவால்விடும் வகையில் மாறியுள்ளது. இந்த கூட்டணியில் சமாஜ்வாடி கட்சி 298 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 105 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

இந்த கூட்டணி உருவாக சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்யாதவுடன் நேரில் பேசியதன் மூலம் பிரியங்கா சுமூக முடிவை எட்ட செய்தார். இதனால் தற்போது அனைவரது பார்வையும் பிரிங்கா மீது திரும்பி இருக்கிறது. பிரியங்கா கொஞ்சம், கொஞ்சமாக தீவிர அரசியலுக்கு வருவதால் பா.ஜ.க., பகுஜன் சமாஜ் கட்சியினர் தங்கள் பிரசார வியூகத்தை மாற்ற வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் உத்தரப்பிரதேச காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் பிரியங்காவும் இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் சென்று பிரியங்கா பிரசாரம் செய்வார். என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை அமேதி, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் மட்டும் முடங்கிக் கிடந்த பிரியங்கா தற்போது உத்தரபிரதேசம் முழுக்க சூறாவளி பிரசாரம் செய்ய முன் வந்திருப்பதால் அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response