பேட்டி
Now Reading
அதிமுவிடம் விலைபோக மாட்டேன் -தீபா
0

அதிமுவிடம் விலைபோக மாட்டேன் -தீபா

by editor sigappunadaJanuary 31, 2017 1:01 pm

அதிமுக தலைவர்களுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியாகியிருக்கும் தகவல் தவறு என்றும், அடிப்படை ஆதாரமற்றது என்றும் தீபா கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை அரசியலுக்கு வர வேண்டும் என்று, அதிமுக தொண்டர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். முன்னாள் நிர்வாகிகளும் பலர் அவரைச் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தினமும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் தீபா வீட்டுக்கு வருகிறார்கள். அவரது வீட்டின் முன்பு குவியும் தொண்டர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. தினமும் மாலையில் தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார். ‘நம்பிவரும் தொண்டர்களை கைவிட மாட்டேன். வருகிற 24ஆம் தேதி (ஜெயலலிதா பிறந்த நாள்) அரசியல் பயணத்தின் அறிவிப்பை வெளியிடுவேன்’ என்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில், அதிமுக மேலிடத் தலைவர்கள் சிலருடன் தீபா ரகசியப் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும், அவர்களை இழுக்க முயற்சிப்பதாகவும் தகவல் பரவியுள்ளது. இதை தீபா மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: ‘நான் நானாகவே இருக்கிறேன். நான் அதிமுக தலைவர்களுடன் ரகசியப் பேச்சு நடத்தியதாக வெளியாகியிருக்கும் தகவல் தவறு. அடிப்படை ஆதாரமற்றது. எனது வீட்டின்முன்பு தினமும் மணிக்கணக்கில் திரண்டு நிற்கும் தொண்டர்களைப் பார்க்கிறேன். என்னை நம்பிவரும் அவர்களுக்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன். அதே நேரத்தில், அவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை வந்துவிடுமோ என்ற அச்சமும் உள்ளது. தற்போது அவர்களின் கருத்துகளை கேட்டு வருகிறேன்’ என்று கூறினார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response