மாவட்டம்
Now Reading
அதிமுக-வை யாராலும் வீழ்த்த முடியாது: நடராஜன்
0

அதிமுக-வை யாராலும் வீழ்த்த முடியாது: நடராஜன்

by editor sigappunadaJanuary 17, 2017 6:52 pm

தஞ்சையில் நடந்த பொங்கல் விழாவில் நடராஜனின் பேச்சு குருமூர்த்திக்கும், நடராஜனுக்குமிடையே மோதலை உருவாக்கியிருக்கும் நிலையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி தஞ்சை ரெயில் நிலையம் அருகேயுள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன் மாலை அணிவித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ‘எம்.ஜி.ஆரின் 100வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஈழத்தில் பிரச்னை நடந்தபோது எம்.ஜி.ஆருக்கு பக்கபலமாக இருந்தவர் பழ.நெடுமாறன். அவர் தற்போது இங்கு இருக்கிறார். அதைப் பார்க்கும்போது எம்.ஜி.ஆரின் இதயம் இங்கு இருப்பதாக எண்ணுகிறேன்.

எம்.ஜி.ஆரின் இதயக்கனியாக இருந்த ஜெயலலிதா மறைந்த நிலையில், எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது வருத்தமளிக்கிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அறிக்கை தயார்செய்து வைத்திருந்தார்.

அவர் பிரிந்த நிலையில் அவரது அறிக்கையின்படி, எம்.ஜிஆரின் நூற்றாண்டு விழாவை அதிமுக-வினர் கொண்டாடி வருகிறார்கள். 44 ஆண்டுகளாக இந்த இயக்கம் வீறுநடை போடுகிறது. இந்த இயக்கம் மேலும் வலுப்பெறும். லட்சோபலட்சம் தொண்டர்கள் இந்த இயக்கத்தை வழிநடத்துகிறார்கள்.

1.5 கோடி தொண்டர்களுடன் ஆலமரம்போல் இந்தக் கட்சி விளங்குகிறது. அதிமுக-வில் கடைசித் தொண்டன் இருக்கும் வரை இந்த இயக்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது.’ இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response