மாவட்டம்
Now Reading
அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் வி.கே. சசிகலா ஆலோசனை
0

அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் வி.கே. சசிகலா ஆலோசனை

by editor sigappunadaJanuary 4, 2017 12:07 pm

201701041127158_aiadmk-headquarters-district-officials-shashikala-consulting_secvpf

அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா, இன்று முதல் ஆலோசனை நடத்தவுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, அதிமுக பொதுச் செயலாளராக வி.கே. சசிகலா, பொறுப்பேற்றார். இதனையடுத்து, அதிமுக வளர்ச்சிப் பணிகள் குறித்து, மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த அவர் திட்டமிட்டர்.

அதன்படி, இன்று முதல் வரும் 9-ம் தேதி வரை, அதிமுகவின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் சந்தித்து, வி.கே.சசிகலா ஆலோசனை நடத்துகிறார்.

அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் சசிகலா சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.

இதைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கூறப்படுகின்றன.

இதையும் படிச்சிருங்க !
பிரியாணிக்கான சண்டையால் நின்று போன திருமணம் - பெண் வீட்டார் அசைவ உணவை வழங்காததால் ஏற்பட்ட பிரச்சினையில், மீரட்டின் முஸாஃபர் நகர் கிராமத்தில் நடைபெற இருந்த திருமணம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்துத் திருமணப் பெண் நக்மா Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response