மாவட்டம்
Now Reading
அதிமுக தலைமையகத்தில் சசிகலா புஷ்பா கணவருக்கு அடி, உதை
0

அதிமுக தலைமையகத்தில் சசிகலா புஷ்பா கணவருக்கு அடி, உதை

by editor sigappunadaDecember 28, 2016 5:50 pm

கட்சித் தலைவர் தன்னைத் தாக்குவதாக மாநிலங்களவையில் பகிரங்கமாக புகார் கூறிய சசிகலா புஷ்பாவை கட்சித் தலைமை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியது.

அதன் பின்னர் தொடர்ந்து ஜெயலலிதாவை விமர்சித்து வந்த சசிகலா புஷ்பா, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவருக்கு ஆதரவாகவும், அவரை உடனிருந்து கவனித்துக் கொண்ட சசிகலாவுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வந்தார். இது தொடர்பாக கவர்னருக்கு கடிதமும் எழுதியிருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பொதுச் செயலாளர் பதவியை சசிகலா ஏற்க தடை விதிக்குமாறு நீதிமன்றத்தை நாடிய சசிகலா புஷ்பா, பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தானும் போட்டியிடப் போவதாகவும் கூறினார்.

இந்நிலையில், நாளை பொதுக்குழு கூட்டம் நடைபெற இருந்த நிலையில் அதிமுக தலைமைக்கழகத்திற்கு சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞரும், சசிகலா புஷ்பாவின் கணவரும் இன்று பிற்பகல் வருகை புரிந்து அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட மனுத்தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர். இது அங்கிருந்த அதிமுக தொண்டர்களை உஷ்ணமாக்கியது. அதையடுத்து, உடனடியாக மோதல் வெடித்தது. மனுத்தாக்கல் செய்யலாம் என்று வந்தவர்களை அங்கிருந்த அதிமுக தொண்டர்கள் சிலர், சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரனையும், அவரது வழக்கறிஞரையும், சரமாரியாக தாக்கினர். அதில், சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரனின் மூக்கு உடைந்து பலத்த ரத்தகாயம் ஏற்பட்டது. அப்போது, அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் தலையிட்டு காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்ததோடு இது தொடர்பாக விசாரணை செய்து வருகிறார்கள்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response