அரசியல்
Now Reading
அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு- ஆட்சி மாற்றமா?
0

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு- ஆட்சி மாற்றமா?

by editor sigappunadaApril 18, 2017 11:35 am

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நாளை (இன்று 18.4.2017) சென்னைக்கு வர வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்புவிடுத்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழலில் கட்சித் தலைமை அலுவலகத்தில் இருந்து எம்.எல்.ஏ.க்களுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்கள் சென்னை வந்தவுடன் முதல்வர் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக-வின் அதிகாரபூர்வ இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் வழங்கியதாக டி.டி.வி.தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேவேளையில், லஞ்சம் பெற்றதாக டெல்லியைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரா கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், டி.டி.வி.தினகரனை கைது செய்ய இன்று டெல்லி போலீஸார் சென்னை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளையில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடை பெற்று வருகிறது. வருமான வரித்துறையின் பிடியில் விஜயபாஸ்கர் சிக்கியிருப்பதால் மற்ற அமைச்சர்களுக்கு பிரச்னை ஏற்படும் என்ற சர்ச்சை கிளம்பியது. அவரை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுவதாகவும் செய்திகள் வெளியாயின. இந்த இக்கட்டான சூழ்நிலையில் பிளவுபட்டிருக்கும் அதிமுக-வை இணைக்கும் முயற்சியும் ஒருபுறம் நடந்துவருவதாக கூறப்படுகிறது.

இதை உறுதிப்படுத்தும்விதமாக “அதிமுக-வின் இரு அணிகளும் இணைவது குறித்து யாராவது அணுகினால் நிபந்தனையின்றி கலந்து பேசத் தயார்” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சூழ்நிலையில்தான் தலைமைச் செயலகத்துக்கு பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நேற்று (17.4.2017) பகல் 12.30 மணிக்குச் சென்றார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அவர் ஆலோசனை நடத்தினார். மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் அப்போது உடன் இருந்தனர். இந்த சந்திப்புக்குப் பிறகே தமிழக முதல்வர் அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் என்னென்ன விஷயங்கள் விவாதிக்கப்படும் என்ற கேள்வி எழுகிறது. ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து அதிமுக கட்சி தொடர்ந்து அசாதாரண சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது. இந்தத் தருணத்தில் அதிமுக பிளவுபட்டிருப்பது எதிரிகளுக்கு சாதகமாக அமையலாம் என்பது அதிமுக நிர்வாகிகளின் கவலையாக இருக்கிறது. எனவே, இன்று முதல்வர் தலைமையில் நடக்கவிருக்கும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் அணியோடு இணைந்து கட்சியை பலப்படுத்துவது குறித்து எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுமா? இதுகுறித்து எம்.எல்.ஏ.க்களிடம் கருத்து கேட்கப்படுமா என்ற கேள்வி எழுகிறது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response