மாவட்டம்
Now Reading
அதிமுகவை சசியிடம் ஒப்படைத்த பொதுக்குழு
0

அதிமுகவை சசியிடம் ஒப்படைத்த பொதுக்குழு

by editor sigappunadaDecember 29, 2016 2:37 pm

அதிமுக பொதுக்குழுவில் சசிகலா தலைமையை ஏற்பது உள்ளிட்ட 14 முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியதும் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ஓபிஎஸ் கூறியதாவது: ”சட்டவிதிகளுக்கு உட்பட்டு சின்னம்மா அவர்கள் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். மதிப்பிற்குரிய சின்னம்மாவிடம் கழக தலைமை ஒப்படைப்பட்டுள்ளது. பொதுக்குழு நகல் சின்னம்மாவிடம் ஒப்படைக்கப்படும் , ஒப்புதல் பெற சின்னம்மாவை சந்திக்க செல்கிறோம்” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து சற்று நேரம் கூட தாமதிக்காமல் பொதுக் குழு தீர்மான நகலை சசிகலாவிடம் வழங்க ஓபிஎஸ் , எடப்பாடி, செங்கோட்டையன் , தம்பிதுரை உள்ளிட்டோர் போயஸ் தோட்டம் சென்றார். போயஸ் தோட்டத்தில் 250க்கும் அதிகமான போலீஸார் பாதுக்காப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்லம், சசிகலாவை சந்தித்தார். இவர்களிடையே பேச்சு வார்த்தை நடைபெற்றுது. போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு சசிகலா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்லம் சசிகலா அவர்களிடம், பொதுக் குழு தீர்மான நகலை வழங்கினார். சசிகலா அமைதியாக அதை ஏற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம். அப்போது அவர், “அதிமுக பொதுக்குழு சிறப்பாக நடைபெற்றது. அதில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அம்மா ஆற்றிய அரும்பணிகள், தமிழக மக்கள் மீது அம்மா வைத்துள்ள பாசம் ஆகியவற்றை நினைவு கூர்ந்து தமிழக மக்களுக்கு நன்றி நினைவு கூறப்பட்டது. கிட்டதட்ட 33 ஆண்டு காலம் அம்மா அவர்களின் வாழ்விலும் தாழ்விலும் நீங்காமல் நின்று, அம்மாவிற்கு துணை நின்று கடமையாற்றியவர் சின்னம்மா அவர்கள். சின்னம்மா அவர்களை கழகத்தின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க பொதுக் குழுவின் ஒட்டு மொத்த உறுப்பினர்களும் முழு சம்மதம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து கழகத்தின் தலைமை ஏற்கவும், கழகத்தின் பொதுச் செயலாளராக சின்னம்மா அவர்கள் பொறுப்பேற்கவும் பொதுக்குழுவில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மான நகலை வழங்க, அம்மா அவர்கள் வாழ்ந்த கோவிலாம் வேதா இல்லத்திற்கு வருகை தந்தோம். இங்கே சின்னம்மா அவர்களிடம் பொதுக் குழு தீர்மான நகலை வழங்கினோம். சின்னம்மா அவர்களிடம், ‘தயவு கூர்ந்து கழகத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டோம். சின்னம்மாவும் அருள் கூர்ந்து, கழகத்தின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க முழுமனதோடு சம்மதம் தெரிவித்துள்ளார். விரையில் சின்னம்மா அவர்கள் கழக தலைமையத்திற்கு வந்து பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்று பணியாற்றத் தொடங்குவார்” என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து போயஸ் தோட்டத்தில் கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response