அரசியல்
Now Reading
அதிகாரிகள் அதிரடி மாற்றம் – பழிவாங்கிய சசிகுரூப்
0

அதிகாரிகள் அதிரடி மாற்றம் – பழிவாங்கிய சசிகுரூப்

by editor sigappunadaMarch 7, 2017 11:51 am

ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிரடியாக அதிகாரிகள் மாற்றப்படுவதும், பதவி விலகுவதும் அடிக்கடி நிகழ்ந்துவருகின்றன. தமிழக அரசின் தலைமைச் செயலாளரான ராம் மோகன ராவ் வீட்டில் வருமான வரிச்சோதனை நடந்ததை அடுத்து அவர் பதவி பறிபோனது.

இதையடுத்து கிரிஜா வைத்தியநாதன் தமிழகத்தின் தலைமைச் செயலரானார். இதையடுத்து, சாந்தா ஷீலா நாயர், ஷீலா பாலகிருஷ்ணன், ராமலிங்கம் போன்ற அதிகாரிகள் பதவி விலகினர். இந்த பதவி விலகளுக்கு இதுவரை காரணம் தெரியவில்லை.

இந்நிலையில் தற்போது தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் விவரம் வருமாறு :

தமிழ்நாடு சிமென்ட் கழக மேலான் இயக்குனராக சபிதா, கனிமவளத் துறை இயக்குனராக வேங்கடேசன், சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன், வணிகவரித் துறை இணை ஆணையர் மகேஸ்வரி, சுற்றுசூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் முகமது நசுமுதின், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன்,போக்குவரத்து துறை ஆணையர் தயானந்த் கட்டாரியா, கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க இயக்குனராக காமராஜ், எரிசக்தி தோரை முதன்மை செயலாளர் விக்ரம் கபூர், சுற்றுலாத்துறை ஆணையர் பழனிகுமார், பெருநகர சென்னை மாநகராட்சி இணை கமிஷனர் கஜலட்சுமி,சிறுபான்மையினர் நல செயலாளராக வள்ளலார் உள்பட மொத்தம் 16 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்ட்டனர்.

மேலும், சென்னை மாநகர கூடுதல் ஆணையர் ஸ்ரீதர் வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த செந்தாமரைக்கண்ணனுக்கு இன்னும் பதவி ஒதுக்கப்படவில்லை.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response