க்ரைம்
Now Reading
அடடே! புதுசா இருக்கே இந்தக் கொள்ளை!!!
0

அடடே! புதுசா இருக்கே இந்தக் கொள்ளை!!!

by Sub EditorDecember 30, 2016 8:01 pm

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், தடா பகுதியை சேர்ந்தவர் ஷேக் அப்துல் ரஹீம், பி.காம் பட்டதாரி. இவரது நண்பர் செல்வரத்தினம். இருவரும் வேலை தேடி ஐதராபாத் சென்றனர். அங்கு ரஹீமின் மற்றொரு நண்பர் நரேஷ் என்பவருடன் சேர்ந்து அதிக பணம் சம்பாதிக்க திருட்டு தொழிலில் ஈடுபடுவது என முடிவு செய்தனர். இதையடுத்து திருடுவது எப்படி? கொள்ளை அடிப்பது எப்படி? என யு-டியூபில் பார்த்துள்ளனர். இதைசெயல்படுத்த நினைத்து ரஹீம் கடந்த நவம்பர் மாதம் பீகார் மாநிலத்திற்கு சென்று ரூ.50 ஆயிரத்தில் 2 துப்பாக்கி, 40 தோட்டாக்களை வாங்கி வந்தாராம்.

முதல் கொள்ளையை கட்சிகோலி பகுதியில் உள்ள நரேஷின் உறவினர்கள் வீட்டில் முயற்சித்தனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. மாதாபூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணம் எடுப்பதற்காக ரஹீமும், நரேஷும் சென்றனர். அப்போது வங்கிமேலாளர் மன்மத அலியின் நடவடிக்கையை கவனித்த இருவரும், சாந்தி நகரில் உள்ள மன்மத அலியின் வீட்டை நோட்டம் விட்டனர். தொடர்ந்து நரேஷின் நண்பர் ராஜேந்திரா என்பவருடன் இணைந்து வங்கி மேலாளர் மன்மத அலியின் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டனர். அதன்படி ஷேக் அப்துல் ரஹீம், செல்வரத்தினம், நரேஷ் மற்றும் ராஜேந்திரா ஆகிய 4 பேரும் வங்கி மேலாளர் வீட்டிற்கு சென்றனர்.

ரஹீம் மட்டும் துப்பாக்கியுடன் வீட்டினுள் சென்றார். மற்ற 3 பேரும் வெளியே காத்திருந்தனர். வீட்டின் உள்ளே சென்ற ரஹீம், மன்மத அலியிடம் வீட்டில் இருக்கும் பணம் மற்றும் நகையை தருமாறு துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட மோதலில், ரஹீம், மன்மத அலியின் காலில் சுட்டு விட்டு தப்பியோடி விட்டார்.

இதுகுறித்து மன்மத அலி ஐதராபாத் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மன்மத அலியின் வீட்டின் அருகே இருந்த சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்ததில், ரஹீம் உட்பட 4 பேர் இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து கட்சிகோலி பகுதியில் நரேஷின் வீட்டில் பதுங்கி இருந்த ரஹீம், நரேஷ், ராஜேந்திரா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.  மேலும், தலைமறைவாக உள்ள செல்வரத்தினத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க.

– மா.நல்லதம்பி

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response